top of page

tPiz gw;wpa Fwpg;Gfs;

0_Palani aachari.png
1_Vina.jpg

பலா மரமே பொதுவாக தஞ்சாவூர் வீணைகளுக்கு உபயோகப்படுத்துவார்கள். அதுவே உகந்தது. இம்மரம் சீதோஷ்ண நிலையால் அதிகம் பாதிக்காது. லேடெக்ஸ் (Latex)க்கு இணையானதொரு பசை மரத்தின் உள்ளே இருக்கிறது. வீணை செய்யும் மரம் சிராய்கள், கிளைகளின் தழும்புகள் போன்ற குறைபாடுகள் இல்லாமல் இருக்கவேண்டும். இப்போது ரெட் செடார் (Red Cedar) மரமும், மற்ற சில மரங்களும் உபயோகிகிறார்கள். மரம் பதப்பட குறைந்தது 3 மாதங்கள் காற்றோட்டதில் வைத்திருக்க வேண்டும்.

2_Lautenbau.jpeg

வீணை செய்வதைப்பற்றி ஒரு அருமையான புத்தகம் இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டமாக இப்புத்தகம் ஜெர்மன் பாஷையில் இருக்கிறது. இதன் பெயர்: Lautenbau in S̈udindien, M. Palaniappan Achari und seine Arbeit by Norbert Beyer. இம்மொழியைப் படிக்கத் தெரிந்தவருக்கு இதோ குறிப்பு: © 1999 Staaliche Museen zu Berlin - Preußischer Kulturbersitz ISBN 3 - 88609-389-1

வீணைகளின் வகைகள்

வீணைகளில் முழு அளவு வீணை, நடு அளவு வீணை, சின்ன வீணை என்று மூன்று அளவுகள் உண்டு. வேலை செய்யும் சிரமங்கள் எல்லா வீணகளுக்கும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

1. ஒட்டு வீணை

இது இரண்டாம் தரம் என்றாலும் சில சமயம் நன்கு செய்த ஒட்டு வீணை ஏகாண்ட வீணை மாதிரி நன்றாகவே இருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வதானால் சீதோஷ்ண நிலைகளுக்குத் தகுந்தமாதிரி அதிகம் மாறாமல் இருக்க ஏகாண்ட வீணையே நல்லது.போர்ட்டபிள் (portable) வீணை தனித்தனியாகப் பிரித்துச் சேர்க்கும் வகையில் இருப்பது. இது ஓர் அளவுக்குச் சுலபமாக வீணையை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும். ஆனால் ஒன்றை ஒன்று இணைந்து நன்கு பொருந்திஇருக்கவேண்டும்.

2. ஏகாண்ட வீணை

நல்லதொரு ஏகாண்ட வீணை 130” லிருந்து 150” வரை சுற்றளவுள்ள, மற்றும் 6 லிருந்து 7 அடி வரை உயரமுள்ள மரத்திலிருந்து நடுவில் வெட்டிப் பிழை இல்லாமல் செதுக்கி எடுக்கப்பட்ட மரத்திலிருந்து செய்த வீணையாக இருக்க வேண்டும். குடத்திலிருந்து தண்டி பாகம் வரையிலோ, அல்லது குடத்திலிருந்து யாளி வரைக்குமோ இருக்கும். யாளிப் பகுதி தனியாகவே பொறுத்துவர். இதைச் சரியாகச் செய்தால் நல்ல வீணை கிடைக்கும். Red Cedar அல்லது silver wood மரங்களையும் சிலர் உபயோகிப்பர். பலா மரத்தில் வீணை செய்வது மற்ற மரங்களில் செய்வதைவிட முனைந்து செய்ய வேண்டும்.

 

3. ஃபைபர் க்ளாஸ் (Fibreglass) வீணை

இவ்வீணையில் தண்டி முடியும் இடத்திலிருந்து யாளி வரையிலும், மற்றும் குடத்தின் மேல் பலகை, பிருடைகள் மட்டுமே மரத்தினாலானது. மற்றது எல்லாம் ஃபைபர் க்ளாஸாலானது.

வீணையின் முக்கியப்பகுதிகள்

குடம்: பானை மாதிரி பெரிதாக இருக்கும் பகுதி குடம். இது மிக முக்கியமான பகுதி. இயற்கையாக ஒலியைப் பெருக்கிக் கொடுக்கும் பகுதி இது.

3_Kudam.jpeg

குடுக்கை (பேப்பர், சுரைக்காய், ஃபைபர் கண்ணாடி, மரம்): சுரைக்காயால் செய்யப்படும் குடுக்கைக்கு நாதமும்,பழமையின் அழகும் தனி. பின்னர் paper mache-ல் செய்து அதில் ஸரஸ்வதி, லக்ஷ்மி போன்ற படங்களை வரைந்து பொருத்துவார்கள். அக்காலமும் சென்று, உடையாமல் இருப்பதற்காகவும் லேசாக இருப்பதற்காகவும் fiberglassல் செய்து பொருத்துகிறார்கள் இன்று.

4_Kudukkai.jpeg

மெட்டு: வழக்கத்தில், பரம்பரையில்,  மெட்டுக்கள் வெண்கலத்தினாலானது. சரியான கலவைகள் அமைந்த (well tempered) வெண்கல மெட்டுக்கள் இயற்கையான நாதத்துக்கு உதவும். மொத்தம் இருபத்து நாலு மெட்டுக்கள் உண்டு. ஒரு தந்தியில் இரண்டு ஸ்தாயிகள் வாசிக்கலாம். இவைகளை மெழுகின் மேல் பதித்திருப்பார்கள். வாசித்து வாசித்து தேய்மானம் அதிகமாகாமல் இருக்க சிலர் மெட்டுக்களை ஸ்டீலில் செய்திருக்கிறார்கள். ஆனால் இது நாதத்துக்குத் துணை செய்யாது. Magnetic contact mike வைத்து வாசிப்பவர்களுக்கு இது சரி. மெட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று முழுதுமே உருண்டையாக இருக்கும் மெட்டு. மற்றொன்று மேலே, வாசிக்கும் பகுதியில் மட்டும் வளைவு. முதல் வகை மெட்டு தேய்ந்தால் திருப்பி வைத்துக்கொள்ளலாம். ஆனால் மெழுகுக்குள்ளே மெட்டின் படிமானம் எப்போதும் சரியாக இருக்கும் என்று உறுதி கூறமுடியாது. அது மெட்டு பொருத்துபவரைப் பொருத்து வேறுபடும். மெட்டுக்களைச் சரியானபடி தேய்த்துப் பதித்தால் வாசிக்க ஏதுவாகும்.

5_Mettu.jpeg

தந்தி (steel, double wound copper): வீணயின் ஏழு தந்திகளில், நான்கு தந்திகள் மெட்டின் மேல் வாசிப்பதற்காக இருப்பவை. மற்ற மூன்று தந்திகள் பக்கத்தில் இருப்பவை. அதிகம் வாசிக்கும் தந்தி இது. மத்தியஸ்தாயி. வாசிப்பவருக்கு அருகே இருப்பது, ‘சாரணி’ என்பது. ‘ஸ’ என்ற சுருதிக்குச் சேர்த்திருப்பது. அதற்கு ‘ஷட்ஜத் தந்தி என்று சொல்வார்கள்’(ஷட்ஜமத்தந்தி அல்ல).அதை முதல் தந்தி என்றும் சொல்லலாம். அதற்கடுத்தது, ‘பஞ்சமம்’. ‘ப’ என்ற சுருதிக்குச் சேர்த்திருப்பது. அது மந்தரஸ்தாயி அல்லது கீழ் ‘ப’, (இரண்டாவது தந்தி). அதற்கு அடுத்தது மந்தர ஸ்தாயி ‘ஷட்ஜம்’(மூன்றாவது தந்தி). அதற்கும் அடுத்தது, மந்திரஸ்தாயி ‘பஞ்சமம்’(நான்காவது தந்தி). ஒன்றும் இரண்டும் steel தந்திகள். மூன்றும் நான்கும் steel-ன் மேல் copper தந்தியை சுற்றியிருப்பது. இது இரண்டு வகைப்படும். ஒன்று ஒரு சுற்று. மற்றது இரண்டு சுற்று. முதல் வகை வாசிப்பதற்கும் இதவு கிடையாது. வாசிக்கும் சத்தமும் கேட்கும். இரண்டாவது வகையில் இதைத் தவிர்க்கலாம். இப்போது steel க்கு மேல் steel-ஐ (electric guitar) கிடாருக்கு உபயோகிப்பது மாதிரி உபயோகிக்கிறார்கள். Copper double wound string சிறிது ‘அமரிக்கையான’ நாதமாக இருக்கும்.

6_Thanthi.jpeg

பிருடை, கிடார் கீ (Guitar Key): ஏழு தந்திளைப் பிடித்திழுத்து சுருதி சேர்க்க உதவும் மரக் குச்சிகளை பிருடை என்பார்கள் (pegs). இதனால் சில சிரமங்கள் உண்டு. வாசிப்பதைப் பொறுத்து, தேய்மானத்தைப் பொறுத்து இவைகளச் சரி செய்ய வேண்டும். ஆனால் எப்படிச் செய்வது என்று சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். இதற்கு இப்போது guitar keys போடுகிறார்கள். உண்மையாகச் சொல்லப் போனால், இப்படிப் போடுவதால் பிருடைக்கு அவசியமில்லை. அழகுப் பொருளாக, சம்பிரதாயத்திற்காக பிருடை வைக்க வேண்டி வருகிறது. பிருடையயும் வைத்துக்கொண்டு அது அடிக்கடி நழுவாமல் இருக்க வசதியாக, உதவி பண்ணக்கூடிய வகையிலும் வயலினில் இருப்பதுபோலதொரு பகுதியைச் செய்து ‘பிருஹத்வனி லங்கர்’ என்ற பெயரில் காரைக்குடி சுப்பிரமணியன் வீணையில் இணத்திருக்கிறார். இம்மாதிரி ஒரு பகுதியை பிருடையிலேயே புகுத்திச் செய்திருக்கிறார்.

7_Birudai.jpeg

சாதாரண லங்கர்/பிருஹத்வனி லங்கர்: நூறு வருடங்களுக்கும் மேலாகவே லங்கரில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. பிருடைகளைத்தான் சுருதி சேர்ப்பதற்கு அதிகமாக உபயோகப் படுத்துவார்கள். குடத்தின் அடிப்பகுதியில் கட்டியிருக்கும் பித்தளைத்தந்திகளில் மேலும் கீழும் செல்லும் ‘காய்கள்’ ஸ்ருதியைக் கூட்டிக் குறைக்க உபயோகிப்பது வழக்கம். இதையே லங்கர் என்று கூறுவர். இதில் உள்ள பிரச்சினைகள்: 1. ஸ்ருதிக் காய்கள் ஸ்ருதியில் அதிக மாறுபட்டை ஏற்படுத்த முடியாது. சில சமயம் இது ஓரத்தில் ஒதுங்கி இருந்தால் ஸ்ருதியில் எந்த மாற்றத்தையும் செய்ய இயலாது. பிருடையையே உபயோகிக்க வேண்டும். ஆதலால் இதற்கு உபயோகம் குறைவாகவே இருந்தது. 2. பிருடையின் வாழ்வும் குறைந்துவிடுகிறது. இதற்கு முடிவு காணத்தான் guitar keys ஐ உபயோகிக்க ஆரம்பித்தார்கள். ‘பிருஹத்வனி லங்கர்’, ஸ்ருதியினை கிட்டத்தட்ட 4 அல்லது 5 ஸ்தான இடைவெளிவரைக் குறைக்க ஏற்ற உதவுகிறது.

8_Langar.jpeg

மேரு: சொல்லப்போனால், ‘மேரு’ தான் முதல் மெட்டு (வீணையின் ஆரம்பத்தில், யாளிப் பகுதிக்குப் பக்கத்தில் வீணையோடு பொருத்தியிருப்பது). சாரணித் தந்தியை மீட்டினால் (open string) ‘ஸா’ கேட்கும். அப்போது கேட்கும் நாதம், தந்தி மேருவிலிருந்து குதிரையின் (bridgeன்) ‘மேல் ரேக்’ன் மேல் படும் இடம் வரை முழுத் தந்தியும் அதிரும். முழுத்தந்தியின் அதிர்வு (vibration) தான் ஆதார ஸ்ருதியான ‘ஸா’, ஷட்ஜம். ஒவ்வொரு மெட்டிலும் விரல் வைக்கும்போது தந்தியின் நீளம் குறைந்து கொண்டே போகிறது. தந்தியின் அதிர்வுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன, ஸ்ருதி கூடிக்கொண்டே போகிறது. இரண்டு ஸ்தாயிகளாக விரிவடைகின்றன. மேருதான் எல்லா ஸ்வரஸ்தானங்களுக்கும் ஆதாரம். அதுவே இமயமலை!

9_Meru.jpeg

குதிரை (bridge): வாசிக்கும் 4 தந்திகளும் குதிரைமேல் அமர்ந்து ஸ்வர ஓட்டத்தைச் சமாளிக்கிறது. லங்கர்தான் பிடித்திழுத்து நிறுத்தி வைக்கும் ‘லகான்!

10_Guthirai.jpeg

மேல் ரேக்: வாசிக்கும் தந்திகளை குதிரையின் மேல் இருத்தச் செய்திருக்கும் வெண்கலத்தினாலான தகடை (plate) மேல் ரேக் என்று கூறுவர். இது மிகச் சிறிதளவு வளைந்திருக்கும். நாதம் மிக சுத்தமாக, துல்லியமாக வெளிவர வேண்டுமானால் தந்திகளை இதன் மேல் சரியான இடத்தில் உட்கார வைக்க வேண்டும்.  இது ஒரு கலை. நிறைய நேரமும் பொறுமையும் தேவை. காரைக்குடி சாம்பசிவ அய்யர் இதில் மிகுந்த தேர்ச்சி உடையவர். 

Mel-Rekku.jpg

பக்க ரேக்: பக்கத்துத் தந்திகளைத் தாங்கிக் கொள்ள குதிரையையில் ஒட்டிச் சாய்ந்தமாதிரியான வளைந்த வெண்ட்கலத்தினாலானதொரு metal plate டைத்தான் பக்க ரேக் என்பார்கள்.

11_Pakka-Rekku_edited.jpg

‘குப்பி’ (குடுக்கைக்கு மேல்): குடுக்கையைத் தாங்கிக் கொண்டு தண்டியில் இணைக்கவைக்கும் சாதனம்.

12_Kuppi.jpeg

‘குமிழி’: பக்கத் தந்தியைக் குமிழி வழியாகச் செலுத்தி லங்கரோடு இணைப்பார்கள். இதைச் சாதாரணக் குமிழியாகச் செய்திருத்தலாம். மற்றொரு வகைக் குமிழி சிறிதளவுக்கு ஸ்ருதி சேர்க்கும் வகையில் அமைத்திருக்கும்.

Kumizhi_edited.jpg

வளையம்: லங்கரைப் பொருத்த இருக்கும் காது. இவ்வளயத்தில்தான் தந்தியைக் கட்டுவார்கள்.

8_Langar.jpeg

மெழுகு (Wax or acrylyic): தேன் மெழுகு, மஞ்சள் மெழுகு, வெள்ளை மெழுகு என்ற மூன்று விதமான மெழுகுகளைச் சரியான கலவையில் கலந்து, குங்கிலியம் (allum powder), கருப்புப் பொடிகளைச் சேர்த்துக்காய்ச்சிப் பின்னர் இறுக விட்டு இளம் சூட்டோடு உருட்டி வீணையின் தண்டியின் மேல் ‘காடிச்சக்கை’ என்ற பகுதியில் இருத்துவார்கள். இதற்கு மேல்தான் மெட்டுக்களைப் பதிப்பார்கள். வீணைக்கு உயிர் கொடுப்பது மெட்டுக்கள் பதிப்பதுதான். இதுதான் மிகக் கடினமான பகுதி. துல்லியமான காதும், திறமையும், பொறுமையும் வேண்டும்.

15_Mezhugu.jpeg

மெட்டு வைப்பதில் உள்ள நுணுக்கங்கள்

வீணை ஓர் ஆசான். இதனாலேதான் பெரிய மஹான்கள் இதை ஞானமார்க்கத்திற்கு எடுத்துச் செல்லும் உயர்ந்ததோர் இசைக்கருவியாகப் பரிந்துரைத்தார்கள். ஒவ்வொரு கலைஞரும், ஒவ்வொரு சங்கீத ரஸிகரும் மெட்டு வைத்துப் பார்த்தால் மிக அடிப்படையானதொரு ஸங்கீத நுணுக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். சங்கீத நுணுக்கங்கள் தெளிவடையும். இதனாலே வீணையை விஞ்ஞான ரீதியாக ஒரு ‘சங்கீத சோதனைக் கூடம்’ எனலாம். ஆத்மீக வழியில் ஒரு அருமையான கோயில் எனலாம்.

சங்கீத ஞானம் இருப்பவர்கள் எந்த வாத்யத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்ளலாம். நல்ல சங்கீதத்தை அளிக்கலாம். முக்கியமாக கர்னாடக சங்கீதம் கமகபூர்வமானதொரு சங்கீதமானதால், சிறந்த சங்கீத ஞானம் உள்ளவர் (prodigies) ஒரு சிற்பி தன்னுள் புதைந்திருக்கும் உருவத்தை கல்லில் வடிப்பது போல தன் சங்கீத ஞானத்தை எந்த இசைக்கருவி மூலமாகவும் எளிதாக வெளிப்படுத்தலாம். “சங்கீதத்தில் ஆசை இருக்கிறது ஆனால் ஞானம் இல்லை. எனக்கு எவ்வாறு சங்கீதம் வரும்?” என்பவர்க்கு நல்ல ஞானத்தையும், “எனக்கு சிறிது ஞானம், அல்லது நல்ல ஞானம் இருக்கிறது, இன்னும் சில சங்கீத நுணுக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்பவருக்கு உயர்ந்த ஞானத்தை கொடுக்க வல்லது வீணை. இதில் முதலும் கடைசிப்படியும் மெட்டு வைப்பது எனலாம். ஏனென்றால் மெட்டு வைப்பது என்பது சங்கீதத்துக்கு ஆதாரமான  ஸ்வரஸ்தானங்களை, தேவதைகளைப், பூஜிப்பதற்குச் சமம். நம் மனது, உடம்பைச் சிதைக்காமல் ஒரு நிலைப்படுத்தும் ஓர் ஆத்மிகப் பயிற்சி, யோகா.

இயற்கையான ஸ்ருதி நிலைகளுக்கு ஆங்கிலத்தில் Just Intonation  என்று பெயர். மேலை நாட்டு சங்கீதத்திற்கு (Western classical music-Piano tuning) equal tempered intonation என்று பெயர். Harmony அடிப்படையில் உள்ள மேலை நாட்டு சங்கீதத்துக்கு 12 ஸ்வரஸ்தானங்களும் ஒரே அளவில் அதிரும். இந்திய சங்கீதம்  Just Intonation  ல் அமைந்தது. அதாவது இயற்கையான ஸ்ருதி அமைப்பு (விஞ்ஞான ரீதியில் அமைந்திருக்கும் ஸ்ருதி அமைப்பு). அது ஒரே அளவில் இருக்காது.

ஒவ்வொரு இசைக் கலைஞனும் 12 ஸ்தானங்களை துல்யமாகத் தெரிந்து கொள்வது அவசியம். இதற்கு வீணையே சரியான இசைக் கருவி. ஸ்வயம்பு ஸ்வரங்களாக ஹம்ஸத்வனி வீணையிலிருந்து பிறக்கின்றன. “இதன் அடிப்படையில்தான் நான் 12 ஸ்வரஸ்தானங்களையும் அமைக்கிறேன்”. இதுவே துல்யமான வழி. வீணையில் எந்த மெட்டில் தொட்டாலும் வித்தியாசம் தெரியாமல் இணையாக இருக்கும்படி சரி செய்த வீணையை தைரியமாக ஸ்வரஸ்தானங்களில் மீட்டி ஒலிக்க முடியும். அந்த அனுபவம் பரமானந்தமாக இருக்கும்.

மெட்டுக்கள் பல் வரிசை போல் வரிசையாக அமைந்திருந்தால் மெட்டமைப்பவர் சரியாகச் செய்திருக்கிறார் என்று எண்ணிவிடாதீர்கள். ஒவ்வொரு மெட்டுக்கும் உள்ள ஸ்ருதியின் இடைவெளி ஒரேமாதிரியானது அல்ல. இயற்கையான வழியில் (Harmonics ஐ வைத்து) மெட்டமைத்திருந்தால் அதற்குத்தான் just intonation என்று பெயர்.  சரியாக அமைத்திருந்தால் மெட்டமைப்பு சீராக இல்லாதமாதிரி தோன்றும்.

மெட்டுக்களைச் சரி செய்யும்பொழுது தெரிந்து கொள்ள வேண்டியது…1. மெட்டுக்கும் மெட்டின் மேல் செல்லும் தந்திக்கும் இடைவெளி, முதல் மெட்டிலிருந்து 24வது மெட்டு வரை சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே போகும். அப்போதுதான் மெட்டில் கை வைக்கும்போது அடுத்த மெட்டில்  தந்தி இடித்து நாதத்தைத் தடை செய்யாது. 2. ஸ்ருதியைச் சரி செய்ய மெட்டை அமுக்கும் போது அதிகமாக அமுக்கிவிடக்கூடாது. அதிகமாக அமுக்கிவிட்டால் மேலே தூக்க வேண்டும். மேலே தூக்கினால் கீழே வலுவில்லாமல் மறுபடியும் கீழே போகும். சரியான அளவு அமுக்க கை அனுபம் வேண்டும். கை அனுபவத்துக்கு காது அனுபவம் வேண்டும். சங்கடந்தான்! 3. மெட்டை இடது புறம் நகர்த்தினால் ஸ்ருதி குறையும். வலது புறம் நகர்த்தினால் ஸ்ருதி ஏறும். மேலே தூக்கினால் குறையும், அடுத்த மெட்டில் இடிக்கும். இடிக்ககூடாது என்று நகர்திக்கொண்டே போனால் 24வது மெட்டுக்கு வரும்போது தந்திக்கும் மெட்டுக்கும் இடைவெளி நிறைய இருக்கும். இதற்கு ‘அமுக்கு மேளம்’ என்பர். வாசிப்பது கடினமாகிப் போகும். வாசிக்கச் சுலபமாக இருக்க வேண்டும் என்று தந்திப் பக்கத்தில் வைத்திருந்தாலோ மெட்டின் மேல் இடிக்க நிறைய வாய்ப்புண்டு. சரியானபடி மேளம் பண்ணுவதற்கு நல்ல ஸ்ருதி ஞானமும் அனுபவும் தேவை.

சிலர், ஒருதடவை சரியானபடி மெட்டு வைத்துவிட்டால் பின்னர் தொந்தரவில்லையே என்று நினத்து அசையாமல் இருக்க மெழுகுக்குப் பதில் acrylic ஐ வைத்து மேளம் செய்கிறார்கள். வீணை நன்கு பயிற்சி செய்பவருக்கு மெட்டு சீக்கிரம் தேய்ந்து போகும். மெழுகில் மெட்டைப் பதித்திருந்தால் மெட்டை சீக்கிரம் சரி செய்யலாம். Acrylic கடினமாக இருக்கும். சீக்கிரம் தளராது. ஆதலால் ஸ்ருதி சரியில்லாமல் போனால் சரிசெய்வது கடினம்.

குறிப்பு: வீணகள் ஒரே அளவு கிடையாது. ஆகையால் ஒரேமாதியான மேளம் செய்ய முடியாது.

வீணை பிறக்கிறது

முக்கியமாகத் தமிழ் நாட்டில் தஞ்சாவூர், வீணை செய்வதற்குப் பிரசித்தியானது. அடுத்தது திருச்சியில் உற்பத்தி செய்கிறார்கள். இன்னும் பலாமரத்தில் ஆன வீணையையே விரும்புகிறார்கள் சிலர். முப்பது வருடங்களுக்கு முன்பே பலா மரத்துக்கு பதில் சிகப்பு சிடார் மரத்தில் வீணை  செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அது சுலபமாக நிறையக் கிடைப்பதாலும் லேசாக இருப்பதாலும், அறுப்பதற்குச் சுலபமாக இருப்பதாலும் வசதியாக இருக்கிறது செய்பவர்களுக்கு.

தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் ஆலயத்தைச்சுற்றி இருக்கும் இடங்களில் இன்னும் வீணை செய்வது வீட்டுத் தொழிலாகவே நடக்கிறது. வீணை வாசிப்பவர்கள் மிகக் குறைந்திருக்கிறார்கள். ஆகையால் வீணை செய்பவரும் குறைந்துவிட்டார்கள். தம்பூரின் உபயோகமும் குறைந்துவிட்டது. இயற்கையான தம்பூரா, விவரம் தெரிந்தவர்களும் அதன் நாதத்தை ரசிப்பவருமே உபயோகிக்கிறார்கள்.

16_Kudam.jpeg
17_Chistling Kudam.jpeg

Electronic தம்பூராக்கள் கச்சேரிகளிலிலும் நிறைய உபயோகிக்கப்படுகின்றன. வீணையும் பல காரணங்களைச்சொல்லி  electronic நாதத்தை டிரான்ஸ்மிட் செய்கிறது. இந்தமாதிரி சூழ் நிலையில் வீணையின் உண்மையான நாதத்தை அறிந்தவர் குறைந்துவிட்டார்கள்.

அன்று வீண செய்வதில் சிறந்த இடத்தைப் பெற்ற பரம்பரையாக வீணை வேலை செய்தவர்களில்  பெயர் பெற்றவர்கள் தஞ்சாவூர் நாராயாண ஆசாரியும் அவர் உறவினர்களுமாக இருந்தார்கள். வெகு சிலர் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். பெரிய வீணை இசைக்கலைஞர்கள் சிறந்த வீணை ஆசாரியார்களை ஆதரித்தார்கள். காரைக்குடி சாம்பசிவய்யர் நாராயண ஆசாரியாரை தன் கடைசி காலம் வரை ஆதரித்து வந்தார்.

காரைக்குடி சாம்பசிவய்யர் திருச்சியில் திரு எஸ். ராமனாதன் என்பவருக்கு வீணை சொல்லிக் கொடுத்திருந்ததோடு வீணையின் செய்முறை நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்திருந்தார்.

வீணைக்கு எப்படி செப்புத் தந்திகளின் உதவிகொண்டு மந்திர அனுமந்திரத் தந்திகளைச் செய்வது என்ற செய்முறைகளையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். திருச்சி ராமனாதன் என்று பலராலும் பிரியமாக அழைக்கப்பட்டார்.

Ramji & Co என்ற கம்பெனி சிறந்த வீணைகளை உலகம் முழுக்க விரும்பி வாங்கும்படி உற்பத்தி செய்தது.இந்தக் கம்பெனியில் நாராயண ஆசாரியாரின் உறவான பழனி ஆசாரியார் பல நாள் வேலை பார்த்தார். இவரை டாக்டர் நார்பேர்ட் பேயர் என்ற ஜெர்மன் ஆராய்ச்சியாளர், பேராசிரியர் காரைக்குடி சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் ஆராய்ச்சி செய்து ஓர் அருமையான புத்தகத்தை பெர்லினில் உள்ள மியூசியத்தின் மூலம் வெளியிட்டார். உலகத்திலியே வீணையைபற்றி சிறப்பாக வெளிவந்ததோர் புத்தகம் இது. துரதிர்ஷ்டவசமாக இது ஜெர்மன் பாஷயில் இருக்கிறது. இதை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். வாசிக்கத் தெரிந்தவர்கள் இதை வாங்கலாம். நிறைய விவரங்கள் கிடைக்கும்.

சில போட்டோக்களோடு வீணை உருவாவதைப் பற்றிய சில விவரங்களை இங்கே அளிக்கிறேன். என்னுடைய சேகரிப்பிலிருந்து சில பழமையான வீணைகளையும் சில குறிப்புக்களோடு காண்பிக்கிறேன்.

18_Chistling-Kudam.jpeg
19_Mel palakai getting ready.jpg
10_Refining Kudam.jpeg
21_Dandi Yali getting ready.jpg
bottom of page