top of page

ghuk;gupa ,ir

இசை என்பது, ஒன்று சேர்ப்பது. ஒன்றை ஒன்று இணந்து இருப்பது. இசைவது. இப் பிரபஞ்சத்தில் ஒலி நம்மை எல்லாம் அறிவிக்கும், இணைக்கும், ஓர் அற்புதப் படைப்பு. ஒலிகள் பல விதப்படும். ஓசை என்றால் பொதுவாக வெறும் ‘சத்தம்’ என்றே பொருள் கொள்கிறோம். ஒலிகளும் ஓசைகளும் நிறைந்த இப் பிரபஞ்சத்தில் இவைகளை வகையாக இணைத்து எல்லோரும் ரசிக்கும்படி செய்தால் அதுவே இசை என்று கூறலாம். இது இன்றுவரை தொன்றுதொட்டு வளர்ந்து நிற்கிறது. தெய்வ அம்சம் பொருந்திய பெரியோர்கள் பலர் இதனை தெய்வத்திற்கே, நம் ஆத்மாவிற்கே, அர்பணிக்கும்  வகையில் வளர்த்திருக்கிறார்கள். இதை அறிந்த பெரியவர்கள் இப்பெரியோர்களை ஆதரித்துக் காத்திருக்கிறார்கள். இதுவே நாம் நம் சமூகத்திடம் காட்டும் உண்மயான அன்பு, நட்பு எனலாம். இப்படிக் காத்து வளர்த்த எதுவும் ஒரு பரம்பரைக்கே சொந்தம் இல்லை. இது சமூகத்திற்கே சொந்தம். பழமை அறிந்தவர் புதுமை சேர்த்தால் அப்பழமையும் புதுமையும் மலரும், மிளிரும். இவ்வகையான பழமையும் புதுமையும் ஒன்றிணைத்து நம் இளைய தலைமுறைக்கு நாம் பொறுப்போடு கொண்டு சென்றால் வேறுபாடுகள் நீங்கி நாம் ஒறுங்கிணையும் சக்தி பெறுகும். நாட்டின் ஆக்க சக்தி வளரும். இதுவே என் கனவு.

 

கடந்த 25 வருடங்களுக்கும் மேல் பரம்பரை இசையில் புதுமை கண்டு அதைக் காத்து வளர்க்க ஆராய்ச்சி உத்திகளைக் கையாண்டு இன்றைய உலக சூழ்நிலையில் அனைவருக்கும் சுலபமாக, நேர்த்தியாக, இசை நுணுக்கங்களோடு சென்றடையும்படி செய்திருக்கிறது பிரஹத்வனி. இதில் பங்கெடுத்துக்கொண்ட இசைப்பெரியோர் பலர்.   நாம் நம் சமூகத்திற்குச் செய்யும் பெரிய கடமை இவ்வழிமுறைகளை பாகுபாடு இல்லாமல் நம் இளைய தலைமுறைக்கு அர்ப்பணிக்க வேண்டும். இவ்விதம் நினைக்கும் அனைவருக்கும் பிருஹத்வனி நன்றி செலுத்துகிறது.

‘பாரம்பர்யம்’ என்பது ஸ்மஸ்க்ருத வார்த்தை. ‘பரம்பரை’ என்றும் சொல்லலாம். பரம்பரை பழமையக் குறிக்கிறது. இதைப்பற்றித் தெளிவாக, அருமயாகக் கூறுகிறார் திருவள்ளுவர்.”பழமை எனப்படுவது யாதுஎனின் யாதும்-கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”-திருக்குறள் (801).

“பழமை எனப்படுவது யாதென்று வினவினால் அது பழகியவர் உரிமை பற்றிச் செய்யும் செயலைச் சிதைத்து விடாமல் காத்து வரும் நட்பாகும்.”

‘பாரம்பர்ய இசை’ என்றால் , தொடர்ந்து வந்த இசை என்று பொருள். தொடர்ந்து வந்த இசைக்கு என்ன சிறப்பு? எந்த ஒரு உன்னதமான விஷயத்தையும் வெகு காலம் தொடர்ந்து செய்து வந்தால் அதற்குச் சிறப்பு அதனாலேயேதான். அதுவே உயர்ந்த பழமையைக் குறிக்கும். அப்பழமையப் பழகியவர்க்கு அதன்மேல் உரிமை இருக்கிறது. அதைப் பற்றிச் செய்யும் செயலைச் சிதைத்துவிடாமல் காத்திடுவதே ‘நட்பு’  என்கிறார் திருவள்ளுவர். நட்பு வெறும் உறவல்ல. அன்பு,  காத்தல், கொடுத்தல், வளர்த்தல் என்ற நான்கினயும் உள்ளடக்கியது.

‘பாரம்பர்யத்த்தை’ ஆங்கிலத்தில் tradition என்று கூறுவர். T.S. Eliot என்ற ஆங்கிலக் கவி, கட்டுறையாளர், traditionஐப் பற்றிக் நன்கு விளக்குகிறார். பழமையியில் திளைத்து ஊறி, ஒழுங்குடன் இன்றும் நம்மிடம் தொடர்ந்து இருக்கும் விஷயங்கள்- கலை, இலக்கியம் முதலியவைகள்-ஒன்றோடொன்று பிணைந்து நிற்கும் சிறப்பானதோர் ஒழுங்கு (order) என்கிறார் அவர். அது முழுமயாகவே இருக்கிறது. ஆனால் இந்த ஒழுங்கு, ‘உண்மையான புதிது’ என்ற ஒன்றால், ஒரு கலையால், பழமையில் தோய்ந்த புதுமையால் ஒருசிறிதளவாவது மாற்றப் படுகிறது. இந்த சிறிதளவு மாற்றங்கள் ஒவ்வொரு கலையையும் இலக்கியங்களையும் மொத்தப் படைப்புக்களுக்கும் உள்ள ஒரு ஒழுங்கைச் சம நிலைப்படுத்துகிறது என்கிறார் அவர். இவ்வகையான கலைகளே என்றும் புதிதாகி நிற்கிறது.  ‘புதிது’ என்ற ஒன்று,  இந்த ஒழுங்கைக் குலைக்காமல் படைக்கப்படுகிறது. T.S. Eliot ஐரோப்பாவின் இலக்கியச்சூழலில் சொன்ன விஷயத்தை நமக்கும் பொருத்தமாகவே இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

 

இம்மாதிரியான எண்ணங்களின் அடிப்படையில் பரம்பரைகளின் தனித்தன்மையும், பெருமையும், மற்ற கலைகளின் அழகையும், ஒன்றைஒன்று சார்ந்து இயங்கிவரும் பாங்கினையும் அனுபவிக்கத் தக்கமாதிரி ‘காமெட்’ ஒரு இசைப்பாடத்திட்டதை இசை எல்லோருக்கும் அவர் அவர்களுக்குத் தகுந்த மாதிரி சென்றடையும் வகையில்  பிருஹத்வனி என்றதோர் உலக இசை மையத்தை நிறுவினேன்.

bottom of page