jdpr;rpwg;G
1. இயற்கையாக இசை ஞானம் இல்லாவிட்டாலும் வித்தியாசம் பாராமல், அவர் அவர்களுக்குத் தகுந்த மாதிரி இம்முறையில் நன்குகற்றுக் கொடுக்க இயலும். வழி முறைகள் ஒவ்வொருவருவருக்கும் கற்றுக்கொள்ள ஊக்கம் கொடுக்கும்.
2. இசை ஞானம் உள்ளவர்கள் இசை நுணுக்கங்களை செவ்வனே அறிய ஆராய்ச்சி பூர்வமான அணுகு முறை துல்லியமாக இப்பயிற்சியில் உள்ளது.
3. நன்கு கச்சேரி செய்பவர்க்கு வேண்டிய விஷயங்கள், அணுகு முறைகள் தெளிவாக இதில் அடங்கியுள்ளன, முக்கியமாக, குரல் வளர்ப் பயிற்சி, உச்சரிப்பில் துல்லியமான விழிப்புணர்ச்சி, மனோதர்மத்தை வளர்க்கும் முறை, பாட்டுக்களை நன்கு புரிந்து தெளிவோடு உணர்ச்சியோடும், பாவத்தோடும் பாடும் வழி, மற்றும் தானாகவே பாட்டுக்கள தனக்குப்பிடித்த பாணியில் கற்றுக்கொள்ளும் வழி முறைகள் முதலியன இப்பயிற்சி முறையில் அடங்கும்.
4. சிறு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் ஆராய்ச்சிபூர்வமான வழிமுறைகள் இதில் வெகு சிறப்பாக இருக்கிறது.
5. எல்லா மொழியினரும் இம்முறையால் பயனடைவர். அதற்கு உகந்த மாதிரி technology கற்பிக்கும் முறைக்குத் துணை போகும்.
6. முக்கியமாக மேலை நாட்டு ‘staff notation’க்கு இணையாக ‘ஸ்வரஸ்தான notation’ என்ற முறையால் எந்தவித இசையையும் (ஹார்மனி இல்லாத melodyக்கு, கிராமிய இசையோ, சினிமா இசையோ, எதுவாக இருந்தாலும்) துல்யமாக இம்முறையை வைத்து எழுத முடியும். இதை எழுதக் கற்றுக்கொண்டால் technologyயின் மூலம் உடனடியாக staff notationல் பியானோ, கீபோர்ட் போன்ற வாத்தியங்கள் வாசிப்பவற்கும் கற்பிப்பவர்க்கும் ஏதுவாக மாற்றிக்கொடுக்க முடியும்.
7. இந்திய இசைக்கே உரித்தான, புரிந்து கொள்ளக்கடினமான கமக அசைவுகளை எவரும் சுலபமாகப் புரிந்து கொள்ளும்படி ஒரு வித வளை கோடுகள் கொண்ட புதியதொரு notation இம்முறையின் சிறப்பு அம்சம்.
8. இசையே மருந்தாக, தியானமாக, மூளையின் வலது இடது பக்க திறன்களை நிறைவு படுத்தும் வகையில் உள்ள யோகா’ போன்ற பயிற்சி முறைகள் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
9. இன, மத, மொழி வேறுபாடுகளினால் பாதிக்கப்படாமல் இசையின் உண்மையான அடிப்படைக் குணங்களினால் எல்லோரையும் அடைந்து அவர் அவர்களுக்குள் ஓர் புத்துணர்ச்சியை உண்டாக்கி எல்லோரும் இதனால் பயன் அடையும் முறைகள் இதில் அடங்கும். மத, மொழி, இன உணர்ச்சிகள் மிகுந்தவரை அவரவர்களுக்கு வேண்டிய மாதிரி, உபயோகிக்க இம்முறை வளைந்து உதவும். இன்னொரு வகையில் சொன்னால் இம்முறை மனிதாபிமானம் கொண்டதொரு அடிப்படை இசைப்பயிற்சி எனலாம்.