top of page

g;U`j;tdp

இசை கசடறக் கற்பவர், கற்றபின் நன்கு இசைப்பவர்,

கேட்போர் மகிழக் கற்பிப்பவர், அகில இசையைக் கேட்டு ரசிப்பவர், 

ஆத்மானந்ததில் அமைதி அடைபவர்.  இவர்களே பிருஹத்வனி.

 

பிருஹத்வனி’ ஒரு உலக இசையாராய்ச்சி, மற்றும் பயிற்சி மையம்

ஸ்ரீசெம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர் குத்துவிளக்கேற்றி ‘பிருஹத்வனி’யைத் திறந்து வைக்கிறார் (1990).

Semmangudi-Inauguration-1990.jpeg

பிருஹத்வனி என்றால் ‘பிரபஞ்ச ஒலி’ என்று கொள்ளலாம்

‘கர்னாடக இசை’ உலக இசை மேடையில் ஓர் முக்கிய அங்கம் வகிக்க, எல்லோருக்கும் பயன் பெறும்படி எளிமையாகப் போய்ச்சேர, ‘பிருஹத்வனி’ என்ற தொரு லாபகரமற்ற உலக இசை ஆராய்ச்சி மையம் சென்னையில் நிறுவப்பட்டது (1989). ஸம்ஸ்க்ருதத்தில் ‘ப்ருஹத்’ என்ற சொல், ‘பிரபஞ்சம்’, ”பெரிய’ என்ற அர்த்தங்களை உள்ளடக்கியது. ‘த்வனி’ என்ற சொல்லில் ‘உள்ளும் புறமும் எங்கும் நிறைந்திருக்கிற உயிரொலி’ என்றதொரு அர்த்தம் ஒளிந்திருக்கிறது. இதுவே ‘ஓம்’ என்ற அர்த்தமும் கொள்ளலாம். இந்த வகையில் ‘பிருஹத்வனி’ யில் உலகத்திலுள்ள எல்லாவிதமான ஒலிகளுக்கும், இசைகளுக்கும் இடம் உண்டு என்றும் கூறலாம். இசையில் ஒரு சமத்வ நிலையை அடைய முயலும், மொழி இனம், மதம், நாடு என்றெலாம் பாகுபடுத்தாமல் எல்லோரும் பயனடய நிறுவப்பட்ட, ஒரு இசை ஆராய்ச்சி மையம்.

பிருஹத்வனி ஒரு முழுமையான அரங்கு

‘காமெட்’ இசைக்கல்வி முறை, பழமையும் புதுமையும் ஒன்றிணைந்து, கலைகளையும் கல்வியையும் விஞான ரீதியில் ஒருங்கிணைத்து, இசையில் கற்பவரை முழுமையாக்கி, உலக அளவில் பயன்படப் படைத்ததோர் உன்னத வழி.

இசை கசடறக்கற்க, ‘காமெட்’ கல்வி முறை. ‘காமெட்’ வழி இசைக் கல்வி கற்பவர், கற்றவராகிறார். கற்றவர் சிறந்த கலைஞனாகத் தகுதி பெறுகிறார். தகுதி பெற்ற பின் தங்க வைக்கிறார். தங்க வைத்து அருமையாகப் பேசுகிறார். படிப்பிக்கிறார். பாடுகிறார். வாசிக்கிறார். ஆடுகிறார். ஆட்டுவிக்கிறார். நாடகம் நடிக்கிறார். நடத்துகிறார். கற்பிப்பவர் ஆகிறார், கற்பிப்பவர் எல்லாமாகிறார். எல்லோருக்கும் இசையை அள்ளிக் கொடுக்க ‘பிருஹத்வனி’ (பிரபஞ்ச ஒலி) ஆகிறார். ‘பிரஹத்வனி’ உலகில் கலை அனைத்தையும் கொடுக்க வல்லதோர் அன்பு மருந்து.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்திய இசைப்பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த போது 1989 ம் வருடம் நவம்பர் மாதம் 30ம் தேதி ‘பிருஹத்வனி’ என்றதொரு உலக இசை ஆராய்ச்சி மையத்தை இசைத்துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் சீதா அவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தேன். இதன் காரணம் இசையின் அடிப்படைகளின் முக்யத்வம் தெரியாது ஆர்வத்துடன் மேல் நிலைப் படிப்பிற்கு வந்துவிடுகிறர்கள் என்று நான் அறிந்த உண்மையே. இதை ஆமோதித்தார் டாக்டர் சீதா அவர்களும். கர்னாடக இசையை உலக அளவில் முழுமையாகப் புரிந்து கொள்ள, நன்கு பயில, COMET இசைக்கல்வி முறையைப் படைத்தேன். The Ford Foundation-ம் பின்னர், The India Foundation for Arts-ம், Government of India வும் இதற்கு உதவி செய்தார்கள். இப்பயிற்சி முறை கடந்த 25 ஆண்டுகள் உலகத்தில் சிறந்த கலைஞர்கள் முதல், சிறு கிராமக் குழந்தைகள் வரை பயன் கொடுதிருக்கிறது. இதைப் பற்றித் தமிழ் பேசும் மக்களுக்கு, உலகத்தில் எங்கிருந்தாலும் தமிழைத் தன்னுள் வைத்துக் காப்பவர்களுக்கு, இதை நான் அன்புடன் அர்ப்பணிக்கிறேன். இதனால் எல்லோரும் பயனடைய உதவி செய்யக் காத்திருக்கிறேன் 

bottom of page