top of page

ப்ருஹத்வனியின் இசைவழிக்கல்வி மையத்து திறப்பு விழா மண்ணச்சநல்லூர் திருச்சி மாவட்டம்

ப்ருகத்வனி

25 Oct 2023

அக்டோபர் 24, 2023 அன்று, "சித்ரா சுகிராம் இசைவழிக் கல்வி மையம்" என்னும் தனித்தன்மை பொருந்தியதொரு இசைவழிக் கல்விக்கூடத்தை, திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் பிரபலமான தொழிலதிபர் சுகிராம் அவர்களின் நினைவாக அவர்கள் மனைவி சித்ரா சுகிராமன் அவர்கள் நிருவினார். ப்ருஹத்வனியின் நிறுவனர் டாக்டர் காரைக்குடி சுப்பிரமணியன் அவர்கள் அம்மையத்தைத் திறந்து வைத்தார்.

இது திருச்சியை ஒட்டிய கிராமப்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இசையின் வழியாக அடிப்படைக்கல்வி சிறப்பாக சென்றடைய வாய்ப்புக்களை வழங்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இத்தைகயதொரு புதியதொரு கல்வி பயன்படத்தக்க வகையில் இசைப் பயிற்சியும், வயோதிகர்களுக்கு, கர்பப் பெண்களுக்கு இசை ஓர் மருந்தாகவும், இசை ஆசிரியராக பணிபுரிய விரும்பும் மாணவ மாணவியருக்கு நேர்த்தியான பயிற்சி முறைகளைகளையும் உத்திகளையும் கொடுக்க இருக்கிறது.


சித்ரா சுகிராம் இசைவழிக் கல்வி மையம் நிருவ இதன் நிறுவனப் பெண்மணிகள் கூறும் முக்கிய காரணங்கள்:

 

• "முறையாக சிறு வயதிலிருந்தே இசை கற்று வளர்ந்த குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டென்றறிந்தோம்".


• "அவர்கள் உலக அளவில் அனைத்தும் பெற, நுண்ணிய படைப்பு சக்தி கிட்டும் என்றுணர்ந்தோம்".


• "நமக்கு எளிதில் இசை கிட்டாதென்ற நினைப்பைத் தகர்த்தோம்".


• "பேதமில்லா நிலையே சக்தி. இதுவே இசையின் வடிவென்றுணர்ந்தோம்".


• "உள்ளிசையின் வடிவாகவே வீணை உருவெடுத்து நமக்கு அரியதோர் அமைதியைக கொடுக்குமென்றுணர்ந்தோம்".


• "இதனால் எதிர்காலத்தில் நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் நம்பிக்கைப் பரிசுதான்  "சித்ரா சுகிராம் இசைவழிக் கல்வி மையம்" என்று முடிவெடுத்தோம்".


• "இப்பள்ளியினால் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்க இருப்பது த்யான-யோக வழியில் இசை. இதனால் கற்கும் மாணவ மாணவியர்கள் நல்ல இசை அடிப்படைகளை அறிந்து, தெரிந்து, பயின்று பயனடைவார்கள் என்பது எங்கள் உறுதி".


• "முக்கியமாக.... நல்ல புத்தி கூர்மை, உச்சரிப்பு, பல மொழிகளைக் கற்கும் திறன்,மொழி வளர்ச்சி, பேச்சுத் திறன், நினைவுத்திறன், கலைத்திறன், ஆரோக்யமான மன வளர்ச்சி, அழகுணர்ச்சி, ஒழுங்கு முறை, பொறுமை, நேரத்தின் முக்கியத்துவத்துவம், தன்னம்பிக்கை,பல வகைகளில் ஒருங்கிணைப்பு சக்தி, எல்லோரும் வேண்டும் மன அமைதி".

 

மற்றும் சில தகவல்கள்...

 

இதுவே ஆராய்ச்சியில் தெரிந்த, தெளிந்த, உண்மைகளும் கூட.. இதை உணர்ந்த சில சிறப்புப் பள்ளிகள், பல நகரங்களில் இசைக்கு ஓர் தனி இடத்தை கொடுத்திருக்கிறார்கள். இதை ஆராய்சி பூர்வமாக,  சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசைப் பேராசிரியராய் இருந்த டாக்டர் காரைக்குடி சுப்பிரமணியன் அவர்கள் "காமெட்" என்ற முறையில் உலக அளவில் கடந்த 33 வருடங்களாகப் பரப்பி வந்திருக்கிறார். இதை கிராமப்புறத்தில் வளரும் குழந்தைகளுக்கும், குழந்தைப் பருவத்தில் கற்க முடியாமல் போன பெரியவர்களுக்கும் கிடைக்கும் ஓர் வாய்பை உண்டாக்குவதே மணச்சநல்லூர்  சித்ரா சுகிராம் இசை வழிக்கல்வி மையம் நிறுவும் நோக்கம்..

 

பள்ளிப் படிப்பு இன்னும் சிறக்க, குழந்தைகளுக்கு அவரவர்களுடைய கனவுகள் நினைவாக, வாழ்க்கையில் உலக அளவில் உயர்ந்து நிற்க இவ்விசைவழிக் கல்விக் கூடம் ஒரு உதாரணமாகத் திகழ உறுதி எடுத்துள்ளது.

 

இவ்வுயர்ந்த பணிக்காக, மண்ணச்சநல்லூர் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, தன்னலமின்றி செயல்பட விரும்பும் பெற்றோர்கள் அனைவருமே இம்முயற்சிக்கு அடித்தளமாக நிற்க முன்வந்துள்ளார்கள். முக்கியமாக குழந்தைகளின் தாய்மார்கள் இதற்குத் துணையாக இருக்க முன் வந்துள்ளது ஓர் நற்செய்தி.

 

இசையில் தன்னை அர்பணிக்கும் திறனும் நோக்கமும் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி, பாடத் திட்டம்,முதலியவைகள் அனைத்தும் வழங்கி இது ஒரு உயர்ந்த கலைக் கோயிலாக விளங்க வேண்டிய உத்திகள் அனைத்தையும் "பிருஹத்வனி" வழங்குகிறது. தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறந்திருக்க இந்த நல்முயற்சிக்கு,  மண்ணச்சநல்லூர் பெருமக்கள் முழு ஆதரவு தந்து வரவேற்பார்கள் என்பது திண்ணம். ஏன்? உலகத் தமிழ் மக்கள் இதனால் பயனைடையலாம், உதவ முன்வரலாம். வரவேற்கிறோம்.

 

இதில் பங்கேற்க விரும்பும் பெற்றோர்கள், இதற்கு ஆதரவளிக்க விரும்பும் பரோபகாரப்பெருமக்கள்,தங்களை ஓர் உயர்ந்த ஆசிரியர்களாக்க விரும்பும் இசை ஆசிரியர்கள், இசை மேற்படிப்பு மாணவ மாணவியர்கள், மற்றும் இசைவழிக்கல்வியில் பயனடைய விரும்பும் அனைவரும்  கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்: contact@brhaddhvani.com









ப்ருஹத்வனியைப் பற்றி...


ப்ருஹத்வனி 33 வருடங்கள் இசை ஆராய்ச்சியில்  உலக அளவில் செயல்படும் சென்னையில் இருக்கும் ஒரு ஸ்தாபனம். நம் கலாசாரம் காக்க டென்மார்க்கிலும், இங்கிலாந்திலும் இரு கிளைகளை நிறுவியிருக்கிறது.  https://www.brhaddhvani.com


எல்லாம் கடந்து உள் நிற்கும் பொருளே கடவுள்

எல்லாம் கடந்து உள் நிற்கும் ஒலியே இசை

பேதமில்லாப் பெரும்பொருளே கடவுள்

பேதமில்லாப் பெருஒலியே ப்ருஹத்வனி

இசையே ப்ரபஞ்ச ஒலி

ப்ரபஞ்ச மொழியே இசை


 

bottom of page